வங்கக் கடலில் புதிதாக உருவான புரெவி புயல் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக குத்தாலம், மங்கநல்லூர், பாலையூர் செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
காலை 6 மணி நிலவரப்படி, மயிலாடுதுறையில் 122 மி.மீ, கொள்ளிடம், 71 மி.மீ, தரங்கம்பாடியில் 54 மி.மீ, மணல்மேடு பகுதியில் 74 மி.மீ, சீர்காழியில் 99 மில்லி மீட்டர்வரை மழை பதிவாகியுள்ளது. மக்கள் நடமாட்டமின்றி மயிலாடுதுறை வெறிச்சோடி காணப்படுகிறது. பல இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.