மயிலாடுதுறையில், மாற்றுத் திறனாளிகளின் உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரியும், தனியார் துறையில் 5 சதவீத இட ஒதுக்கீடு கோரியும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினரும், செவ்வாய்க்கிழமை (பிப்.23) அன்று, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு, மறுநாள் காலை விடுவிக்கப்பட்டனர். பின் அனைவரும் மயிலாடுதுறை மணிக்கூண்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று (பிப்.25) காலை விடுதலை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகள் அனைவரும், அவர்களது சங்கத்தின், மாவட்ட செயலாளர் டி.கணேசன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 60 பேரையும், மீண்டும் மயிலாடுதுறை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்!