மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில், தமிழ்நாட்டில் தொழில், வணிகம், வேலைவாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவ்வியக்கத்தின் தலைவர் மணியரசன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ தமிழர்கள் தமிழ்நாட்டில் தொழில் செய்ய முடியாமல் நொடித்து போகும் நிலையில் உள்ளனர். மார்வாடிகள், மலையாளிகளுக்கு கீழ் தொழில் செய்து தங்களது வாழ்வுரிமையை இழந்து வருகின்றனர். எனவே, இங்கு மார்வாடிகளோ, மலையாளிகளோ, குஜராத்திகளோ தொழில் செய்யக்கூடாது, வெளியேற வேண்டும். நூற்றில் 10 விழக்காடு தான் தமிழகத்தில் அயலார் இருக்க வேண்டும்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தை வரவேற்கிறோம். அதுபோல தமிழகத்திலும் உழவர்களின் உரிமையை மீட்க வரும் 23 ஆம் தேதி தொடர் போராட்டத்தை காவிரி உரிமை மீட்பு இயக்கம் மூலம் நடத்த உள்ளோம்.
ரஜினி, கமல் ஆகியோர் திரைத்துறையில் இனி சம்பாதிக்க முடியாது என்று ஓய்வு பெற்ற பின்னர், அரசியலுக்கு வருகின்றனர். நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியம் இல்லாமல் தேர்தல் நேரத்தில் மற்ற அரசியல் கட்சிகளுடன் சீட் பேரத்தில் ஈடுபடவே அரசியலுக்கு இவர்கள் வந்துள்ளனர். பணம் சம்பாதிக்கவும், புகழை தக்கவைத்துக்கொள்ளவும் அரசியலை தேர்ந்தெடுத்து தாமதமாக வந்துள்ளனர், அவர்கள் கனவு பலிக்காது “ என்றார்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஏர் கலப்பை ஏந்தி பேரணி!