ETV Bharat / state

சோழீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்! - Mayiladuthurai news

Choleeswarar temple kumbabhishekam: மயிலாடுதுறை அருகே இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள குத்தாலம் சோழீஸ்வரர் திருக்கோயிலில், 15 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சோழீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 3:28 PM IST

சோழீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய சோழீஸ்வரர் கோயில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்து உள்ளது. ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் திருஞான சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது.

இக்கோயில் அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரர் என்றும், சோழ மன்னன் திருப்பணிகள் செய்து வழிபட்டதால் சோழீஸ்வரர் என்றும் பெயர் பெற்றது. மேலும் இக்கோயில் அக்னி பகவானின் பாவங்களை போக்கிய தலம் மற்றும் தொடர்ந்து சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள், சனீஸ்வர பகவான், ஆஞ்சநேயர் வழிபட்ட தலமுமாகும்.

மேலும் ஆஞ்சநேயர் தாமரைப்பூ கொண்டு வழிபாடு நடத்திய இந்த தலத்தில் தான், சோழீஸ்வரர் சுவாமியை திருமண கோலத்தில் தரிசித்து தன் பாவங்களை போக்கிக் கொண்டார் அக்னி பகவான். மேலும் இத்தலத்தில் பரத முனிவர் பிள்ளை பேரு வேண்டி புத்திர காமேஷ்டி யாகத்தை செய்தார். அந்த வேள்வியில் தோன்றியவர் தான் பரிமள சுகந்தநாயகி. அவரும் இத்தலத்தில் தான் இறைவனை அடைய தவம் மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, இத்தலத்து பரிமள சுகந்த நாயகியை வழிபட திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூடும் எனவும் சனி பகவான் சுயம்பு மூர்த்தியாக பாதாளத்தில் இருந்து தோன்றி வழிபட்டதால், இத்தலத்தில் உள்ள சனீஸ்வர பகவானை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் போன்ற பல்வேறு சிறப்புகளை இக்கோயில் கொண்டுள்ளது.

இந்நிலையில், இத்தகைய சிறப்பு மிக்க கோயிலின் கும்பாபிஷேகம், 15 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு இன்று (செப்.10) வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த செப் 6ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு, 6 கால யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து இன்று 6 ஆம்கால யாகசாலை பூஜையில், சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் நடைபெற்று, பூர்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது.

பின்னர் சுவாமி கருவறை, தங்க கலசம், அம்பாள் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும், ஒரே நேரத்தில் வேதியர்கள் மந்திரங்கள் முழங்க, சிவ வாத்தியங்கள் ஒலிக்க புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: கூடங்குளம் அருகே பாறை இடுக்குகளுக்குள் சிக்கிய இழுவை கப்பல்.. அணு உலை ஜெனரேட்டர்கள் என்ன ஆனது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.