நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் நவநீதேசுவரர், வேல்நெடுங்கண்ணி அருள்பாலித்து வருகின்றனர்.
இக்கோவிலில் தான் முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரத்திற்கு, கந்தசஷ்டி திருநாளின் முதல்நாள் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் முருகப்பெருமான் சக்திவேல் வாங்கி செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராண வரலாறு கூறுகிறது.
வேல் வாங்கிய சிங்கார வேலர் ஆவேசத்துடன் வரும் சமயத்தில் சுவாமியின் திருமேனியில் வியர்வைத் துளிகள் உண்டாவது பக்தர்களை இன்றும் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வாகும்.
இந்தாண்டு ஆண்டு கந்த சஷ்டி திருவிழா 15ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5ஆம் திருநாளான வேல் நெடுங்கண்ணியிடம் முருகன் சக்திவேல் வாங்கும் நிகழ்வும், வேல் வாங்கிய ஆவேசத்தில் முருகனின் சிலையில் வியர்வை சிந்தும் காட்சியும் நடைபெற்றது.
கரோனா காரணமாக கோவிலில் நடக்கும் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சாரைப் பாம்பை வெட்டி கோயில் வேல் கம்பியில் குத்திய குடிமகன்! நடந்தது என்ன?