மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட திருவிழந்தூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளின் வருகைக்காக மாணவர்களுக்கு உணவு அளிக்காமல் காலை 9.45 மணி வரை காத்திருக்க வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அரசு நிர்ணயித்த கால அளவினை தாண்டி மாணவர்களுக்கு தாமதமாக உணவு வழங்கி சிரமப்படுத்தியதாலும், அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்பட காரணமாக இருந்த துவக்கப்பள்ளி தலைமையாசிரியை குருபிரபாவை தற்காலிக பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு காரணமாக இருந்த மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் சீத்தாலட்சுமி ஆகியோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிறுவர்களிடம் தீண்டாமை விதைக்கும் விதமாக பேச்சு...பெட்டிக்கடைக்காரர் கைது...