ETV Bharat / state

நாகையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் கைது! - nagapattinam crime news

நாகப்பட்டினம்: கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

three accused arrested for robbery
three accused arrested for robbery
author img

By

Published : Jun 2, 2020, 9:54 PM IST

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் சிட்டு பிரகாஷ், ஸ்டீபன்ராஜ், கலியபெருமாள். இவர்கள் மூவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, வெளிப்பாளையம் கீழையூர் கடை வீதியிலுள்ள ஒரு பேக்கரியையும், நாகையிலுள்ள இருசக்கர வாகன உதிரிபாக கடையையும் உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களைக் கொள்ளையடித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க வெளிப்பாளையம் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

அதன்படி, தனிப்படை காவல் துறையினர் கொள்ளைச் சம்பவம் அரங்கேறிய பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.

இந்நிலையில், கொள்ளையர்கள் மூவரையும் கையும்களவுமாகப் பிடித்த காவல் துறையினர் அவர்களைக் கைதுசெய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் தகராறு: ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.