கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் தமிழ்நாடு முழுவதும் இன்று திறக்கப்பட்டது.
இந்நிலையில் டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு சில பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நாகையில் பல இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள விழுந்தமாவடி, பிரதாபராமபுரம், பூவைத்தேடி, புத்தமங்கலம், கூறைநாடு, ஆணைக்கரைசத்திரம் உள்ளிட்ட ஆறு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க..டாஸ்மாக் எதிர்ப்பு: முதலமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கிய ஜோதிமணி