வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வந்தது. இதனிடையே ஐந்தாவது நாளாக நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மீண்டும் பெய்யத் தொடங்கிய மழையானது விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
தொடர்ந்து நள்ளிரவில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக, கீச்சாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரது மாடி வீடு ஒன்று இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் குடி இல்லாத காரணத்தால் அங்கு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் நள்ளிரவில் வீசிய சூறாவளி காற்றில் கீச்சாங்குப்பம் கடற்கரைப் பகுதியில் இருந்த மின் கம்பம் வயர் அறுந்து விழுந்து, இரண்டு ஆடுகள் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
இதைப்போல் வேளாங்கண்ணியில் வீசிய பலத்த காற்றினால் பேருந்து நிலையம் அருகே உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்ததுடன், பல மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இதையும் படிங்க: இரண்டு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை