புயல் காரணமாக மயிலாடுதுறையில் கடந்த மூன்று நாள்களாக இரவு பகலாக கனமழை பெய்துவருவதால் பல்வேறு வாய்க்கால், ஆறுகளில் மழைநீர் அதிக அளவில் செல்கிறது.
இந்நிலையில் உளுத்துகுப்பை ஊராட்சியில் உள்ள பனம்பள்ளி வாய்க்கால் முறையாகத் தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்ல வழியின்றி வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டு சிங்கம் தெரு, வள்ளலார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேலும், 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ள நீர் புகுந்ததால் அவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்துள்ளது. தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் உள்ளவர்களை முகாமில் தங்கவைக்க தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்டா, வட மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை