ETV Bharat / state

குப்பை அகற்றுவதில் பிரச்னை: அரசு மருத்துவமனை, நகராட்சி நிர்வாகம் பரஸ்பரம் குற்றச்சாட்டு - mayiladuthurai

நாகை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கும் - நகராட்சிக்கும் இடையே குப்பை எடுப்பதில் பிரச்னை தொடர்ந்துள்ளதால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Government hospital and municipality problem
author img

By

Published : Jul 5, 2019, 1:19 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுற்றுப்புறத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பலரும் இந்த மருத்துவமனையையே நம்பியிருக்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் துப்புரவு பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனையில், மருத்துவக்கழிவுகள் தனியாக செங்கிப்பட்டியைச் சார்ந்த நிறுவனத்திற்கு தரப்படும். அதேபோல பொதுக்கழிவுகளை நகராட்சிக் குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டு வந்தது.

இதனிடையே நகராட்சிக்கும், அரசு மருத்துவமனைக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த சில நாட்களாக, நகராட்சி சார்பில் குப்பையை எடுத்துச் செல்லவில்லை. இதனையடுத்து, கடந்த 1ஆம் தேதி மருத்துவமனை வாசலில், குப்பைகள் கொட்டிய தனியார் நிறுவனத்துக்கு 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

குப்பை எடுப்பதில் அரசு மருத்துவமனை, நகராட்சி நிர்வாகமிடையே பிரச்சினை

இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகர் தரப்பிலும், நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரதீப் கிருஷ்ணகுமாரும், பரஸ்பரம் தொடர்ந்து குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Intro:மயிலாடுதுறை அரசு பொதுமருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாகம் இடையே குப்பை எடுப்பதில் பிரச்சனை, 4 நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள குப்பைகள், இரு தரப்பும் மாறி, மாறி குற்றச்சாட்டு, மாவட்ட ஆட்சியரிடம் புகார்Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பொதுமருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் 2ஆயிரம் வெளி நோயாளிகளும், 300 உள் நோயாளிகளும், மாதத்தில் சராசரியாக 400 பிரசவங்களும், 150அறுவை சிகிச்சைகளும் நடைபெறுகின்றன. இது மட்டுமின்றி, சி.டி.ஸ்கேன், இரத்த வங்கி, டயாலிசிஸ் பிரிவு என்று நவீன உபகரணங்களும் உண்டு. தரங்கம்பாடி, குத்தாலம், மயிலாடுதுறை தாலுகாக்களை சார்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனையையே நாடி வருகின்றனர். இதனால், பெரிய ஆஸ்பத்திரி என்று அழைக்கப்படுகின்றது. இந்த மருத்துவமனையில் துப்புறவு பணியினை மேற்கொள்ள ஸ்மித் ஹவுஸ்கீப்பிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் கடந்த 3ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றது. மருத்துவமனையில், மருத்துவக்கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு, செங்கிப்பட்டியை சார்ந்த நிறுவனம் ஒன்று அதனை பெற்றுச்செல்கின்றனர். ஆனால், நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் பயன்படுத்தும் சாப்பாட்டு உறை, குடிநீர் பாட்டில்கள், பழங்களின் தோல்கள் உள்ளிட்ட பொதுவான கழிவுப்பொருட்கள், ஸ்மித் நிறுவனம் சேமித்து, அதனை நகராட்சி குப்பை தொட்டியில் ஒப்படைத்து வந்தது. இதனை நகராட்சி துப்புறவு பணியாளர்கள், நகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்துச்செல்வர். இதனிடையே நகராட்சிக்கும், அரசு மருத்துவமனை தனியார் நிறுவனம் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கடந்த சில நாட்களாக, நகராட்சி சார்பில் குப்பையை பெற்றுச்செல்லவில்லை, இதனையடுத்து, கடந்த 1ம் தேதி மருத்துவமனை வாசலில், குப்பைகளை துப்புறவு நிறுவனம் கொட்டியது. இதற்காக துப்புறவு நிறுவனத்திற்கு, நகராட்சி நகர் நல அலுவலர் சார்பில் 51ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத கடிதத்தை தனியார் நிறுவனம் வாங்க மறுத்ததால், மருத்துவமனை வளாகத்தில் நோட்டீஸை நகராட்சி அலுவலர்கள் ஒட்டிச்சென்றனர். தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் மேலாக குப்பைகள் அள்ளப்படாத நிலையில், அரசு மருத்துவமனை உட்புறம் ஓர் இடத்தில் குப்பைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகர் தரப்பிலும், நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரதீப் கிருஷ்ணகுமாரும், மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளனர். குப்பைகளை தரம்பிரித்து அளிக்காத காரணத்தால் நகராட்சி சார்பில் குப்பை எடுக்கப்படவில்லை என்றும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று தரம்பிரித்து குப்பைகளை ஒப்படைக்க வேண்டும் 2016ம் ஆண்டு அரசு உத்தரவை பின்பற்றாத காரணத்தால், மருத்துவமனையில் இருந்து கழிவுகள் அகற்றப்படவில்லை எனவே நாங்கள் குப்பைகளை எடுக்க முடியாது என்று நகர் நல அலுவலர் தெரிவிக்கின்றார். மருத்துவமனையில் குப்பைகளை நகராட்சி எடுப்பது வழக்கம், இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாகவும், ஊழியர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையே இதற்கு காரணம் என்று, மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகர் தெரிவிக்கின்றார். ஊழியர்களை நகராட்சி அலுவலர்கள் தரக்குறைவாக பேசியதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து மயிலாடுதுறை கோட்டாச்சியர் கண்மணி விசாரணை மேற்கொண்டுள்ளார். இரண்டு தரப்பினாலும், சுகாதாரமாய் இருக்க வேண்டிய மருத்துவமனையின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

பைட்:-

1. டாக்டர் ராஜசேகர் – தலைமை குடிமையியல் மருத்துவர், மயிலாடுதுறை மருத்துவமனை

2. பானுப்பிரியா – அரசு மருத்துவமனை துப்புறவு ஊழியர்

3. டாக்டர் பிரதீப் கிருஷ்ணகுமார் – நகர் நல அலுவலர், மயிலாடுதுறை நகராட்சி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.