நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட தலைமை அஞ்சலகம் செயல்பட்டுவருகிறது. அந்த அஞ்சலகத்தின் கட்டுப்பாட்டில் சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட வட்டாரங்களில் நூற்றுக்கணக்கான கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் மாவட்ட தலைமை அஞ்சலகத்தின் ஜெனரேட்டர் பழுதடைந்து பல நாள்களாகியும் சரிசெய்யப்படாததால், மின்தடை நேரங்களில் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை செய்யமுடியாமல் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.
அதனால் வாடிக்கையாளர்கள் விரைவாக அஞ்சலகத்தின் ஜெனரேட்டரை சரிசெய்யுமாறு நிர்வாகத்தினரிடம் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் மக்களின் உயிர் காப்பானாக மாறியுள்ள அஞ்சல் துறை!