மயிலாடுதுறை: மயிலாடுதுறை காந்தி சாலையில், நகராட்சியின் பொறுப்பில், மகாத்மா காந்திக்கு மணிமண்டபம் ஒன்று உள்ளது. இங்கு கைத்தடியுடன் காந்தி நடப்பது போல முழு உருவச் சிலை உள்ளது. இந்த சிலை கடந்த சில மாதங்களாக கைத்தடி இல்லாமல் இருந்துள்ளது.
இந்தநிலையில், காந்தி ஜெயந்தியான இன்று (அக்.2), அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த, மணல்மேடு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திகேயன் வந்துள்ளார். அவர், கைத்தடி இல்லாமலிருந்த காந்தியின் சிலையை பார்த்து வேதனையடைந்துள்ளார்.
பின்னர் தன் சொந்த செலவில், மரத்தாலான கைத்தடியை, சிலைக்கு பொருத்தி, பின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில், நகராட்சியின் பராமரிப்பிலுள்ள தலைவர்களின் சிலைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காந்தி அஸ்தியில் விழுந்த சூரிய ஒளி... கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்!