ETV Bharat / state

மயிலாடுதுறை பாதாளச்சாக்கடை பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: 50 பேர் கைது

author img

By

Published : Dec 20, 2019, 7:29 PM IST

நாகை: மயிலாடுதுறை பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

பாதாள சாக்கடை பிரச்சினை இளைஞர்கள் போராட்டம்  மயிலாடுதுறை பாதாளச் சாக்கடை பிரச்னை  நாகை மாவட்டச் செய்திகள்  nagapattinam district news  fifty youths arrested in mayiladurai
மயிலாடுதுறை பாதாளச்சாக்கடை பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி ஆர்பாட்டம்: 50பேர் கைது

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாகப் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டம் தொடங்கியதிலிருந்து பல்வேறு பிரச்னைகள் எழுந்துவரும் நிலையில் கடந்த ஓராண்டாக பாதாளச்சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்படுவதும் அதனால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது.

பாதாளச் சாக்கடை ஆள்நுழைவு தொட்டி வழியே வெளியேறும் கழிவுநீர், சாலைகளிலும் குடியிருப்புகளிலும் சூழ்ந்துநின்று பொது சுகாதாரத்திற்கு சவாலாக விளங்குகிறது. மேலும், பாதாளச் சாக்கடை பிரச்னைகளைத் தீர்க்கக்கோரி மயிலாடுதுறையில் தினசரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

மயிலாடுதுறை பாதாளச்சாக்கடை பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அந்த வகையில் இன்று தன்னார்வ இளைஞர்கள் 50பேர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு பாதாளச் சாக்கடை பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மயிலாடுதுறை காவலர்கள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர்.

இதையும் படிங்க: ஒட்டுமொத்த தமிழர்கள் நலனை குழிதோண்டி புதைக்கும் அதிமுக அரசு - சம்சுல் இக்பால்

Intro:மயிலாடுதுறையில் பாதாளசாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்கள் கைது:-

Body:மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கியதிலிருந்து பல்வேறு பிரச்சனைகள் எழுந்துவரும் நிலையில் கடந்த ஓராண்டாக பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக இதுவரை சாலைகளில் 14 முறை பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டி வழியே வெளியேறும் கழிவுநீர் சாலைகளிலும் குடியிருப்புகளிலும் சூழ்ந்துநின்று பொது சுகாதாரத்திற்கு சவாலாக விளங்குகிறது. இதையடுத்து பாதாளசாக்கடை பிரச்சனைகளை களையாயக்கோரி மயிலாடுதுறையில் தினசரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் தன்னார்வ இளைஞர்கள் 50 பேர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு பாதாள சாக்கடை பிரச்சினையை நிரந்தரமாக சரி செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.