ETV Bharat / state

ஓஎன்ஜிசிக்கு அனுமதியை 3 ஆண்டு நீட்டிக்க பரிந்துரை - விவசாயிகள் கண்டனம் - விவசாயிகள் கண்டன எதிர்ப்பு

நாகப்பட்டினம்: டெல்டா மாவட்டங்களில் எண்ணெய் கிணறு தோண்ட ஓஎன்ஜிசிக்கு மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசு பரிந்துரை செய்ததற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

விவசாயி
விவசாயி
author img

By

Published : Sep 12, 2020, 9:53 AM IST

நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓஎன்ஜிசி, 24 எண்ணெய் கிணறுகள் தோண்ட 2013ஆம் ஆண்டு அனுமதி தரப்பட்டது. ஏற்கனவே 16 எண்ணெய் கிணறுகள் உள்ள நிலையில், மீதமுள்ள எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி சுற்றுச்சூழல் அனுமதி கேட்டிருந்தது.

இதனிடையே, ஓஎன்ஜிசிக்கான அனுமதியை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வல்லுநர் குழு பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "விவசாயிகளுக்கு எதிரான அறிவிப்புகளை மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த எண்ணெய் கிணறு அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வல்லுநர் குழு பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயல், சுனாமி, தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டமாக பின்தங்கி நிலையில் கரோனா போன்ற பேரிடர்களால் இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இந்தச் சூழலில், மத்திய அரசு விடாமுயற்சியாக இப்பகுதிகளில் எண்ணெய் கிணறு அமைத்தே தீருவோம் என்று செயல்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது. தற்போது அனுமதித்துள்ள 24 எண்ணெய்க் கிணறுகளையும் ரத்துசெய்து அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஓன்ஜிசிக்கு விவசாயிகள் எதிர்ப்பு

இல்லாவிட்டால் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்" என எச்சரிக்கைவிடுத்தனர்.

இதையும் படிங்க: மதுரை: நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.