மயிலாடுதுறை: திருவிழந்தூர் ஊராட்சி வேப்பங்குளம் கிராமத்தில் 2500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தைத் தலைமுறை தலைமுறையாகப் பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர். அப்பகுதி விவசாயிகளின் வசதிக்காக அறுவடை செய்யும் நெல்லை அடிப்பதற்கான நெற்களம் அமைக்கப்பட்டு அதனை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த களத்தில் மருந்துகிடக்கு வரப்போவதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்குச் சிரமம் ஏற்படும் என்று கூறி மருந்து கிடங்கு அப்பகுதியில் அமைக்கக்கூடாது என்று வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை நிலஅளவையர்கள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள நெல் களத்தினை அளவீடு செய்ய வருவதை அறிந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனையடுத்து நெற்களத்தை அளக்க வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வேகமாக நிரம்பும் வைகை அணை; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!