ETV Bharat / state

பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்காதது ஏன்? - இந்திய தேசிய லீக் கட்சி கேள்வி

நாகப்பட்டினம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்தும், இந்தியாவில் பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்காது ஏன்? என்று இந்திய தேசிய லீக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய தேசிய லீக் கட்சி  முன்னாள் பொதுச் செயலாளர் எம். ஜி.கே.நிஜாமுதீன்  கரோனா பெட்ரோல் விலை  Indian National League Party  EX. General Secretary MGK Nijamudin Press Meet  Corona Petrol Price  MGK Nijamudin Press Meet  எம். ஜி.கே.நிஜாமுதீன் செய்தியாளர் சந்திப்பு
MGK Nijamudin Press Meet
author img

By

Published : Apr 22, 2020, 11:38 AM IST

கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உலக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளதால், வாகன பயன்பாடு என்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே, வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோலியம் பயன்பாடு என்பது வெகுவாக குறைந்ததால், பெட்ரோலிய உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் பீப்பாய்க்கு சுமார் 10 டாலர் அளவிற்கு கச்சா எண்ணெய்யின் விலையை குறைத்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்யை சேமிக்க முடியாததால், கச்சா எண்ணெய்யின் விலை அங்கு மைனஸ் - 39 டாலருக்கு விற்பனை ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "உலக அளவில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஆனால், இந்தியாவில் அதன் விலை இன்னும் குறையாமல் இருப்பது ஏன்?. அமெரிக்காவால் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தவும் முடியாமல், குறிப்பிட்ட அளவிற்கு மேல் சேமிக்கவும் முடியாததால், விலை வீழ்ச்சிக்கு பிறகும் இலவசமாக மல்லுக்கட்டி மானியத்தோடு கச்சா எண்ணெய் கிடைக்கிறது.

செய்தியாளரகளை சந்தித்து பேசும் எம். ஜி.கே.நிஜாமுதீன்

இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்காமல் கச்சா எண்ணெய் பீப்பாய் 95 டாலராக உள்ளபோது நிர்ணயிக்கப்பட்ட அதே விலையில் தற்போதும் விற்பனை செய்கிறது. இது மக்களின் செல்வத்தை சுரண்டுவதாகும். மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் லிட்டருக்கு 38 ரூபாய்க்கு விற்க முடியும்.

ஆனால் மத்திய அரசு கரோனா பயத்தையும், டெல்லி தப்லீக் மாநாட்டையும் வைத்து அரசியல் செய்து பெட்ரோலிய பொருள்களின் உண்மையை மறைத்து மக்களை ஏமாற்றி வருகிறது", எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க:'பரிசோதித்த 896 பேரில், 806 பேருக்கு கரோனா இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.