கடல் ஆமை பாதுகாப்பு குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருந்ததாவது:
கடல்வாழ் உயிரினங்களான கடல் ஆமை, கடல் பசுக்களின் எண்ணிக்கை குறைந்துவருவதால் பொதுமக்களிடையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன்மூலம் உள்ளூர் மக்களுக்கு சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
அந்த வகையில், நாகை மாவட்டம் கோடியக்கரை வன சரணாலயத்தின் அருகில் கடல் ஆமை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த முப்பரிமாண அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
சூரியசக்தி மூலம் கிடைக்கப்பெறும் மின்சாரத்தைப் பயன்படுத்தி நவீன வசதிகளுடன்கூடிய கடல் ஆமை பாதுகாப்பு மையமும் அங்கு அமைக்கப்படும். இவையெல்லாம் இரண்டு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க : ரயில்வேயை தனியார் மயமாக்க முயற்சி... மத்திய அரசின் அரசாணையை எரித்து போராட்டம்!