புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியில் இருந்து நாள்தோறும் நாகப்பட்டினத்திற்கு மதுகடத்துவது வாடிக்கையாக உள்ளது. இதையறிந்த மாவட்ட காவல்துறையினர் வாஞ்சூர் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் காவல்துறையினரின் கண்ணில் மண்ணை தூவி தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க இன்று வழக்கம்போல் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது பெண் உள்பட 23பேர் ஒரேநாளில் பிடிப்பட்டனர்.
மேலும் அவர்களிடமிருந்து 2,005 லிட்டர் சாராயம், 2,220 மதுபாட்டில்கள், ஒரு கார், நன்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.