மயிலாடுதுறை மாவட்டத்தில், பொதுப்பணித்துறை சார்பில் ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
சீர்காழியை அடுத்த தென்னலக்குடி என்ற இடத்தில் கூப்பிடுவான் கதவணை அருகே தூர்வாரும் பணிகளை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.
இந்நிலையில், அவர் வருவதற்கு முன்பு, அங்கு வந்த விவசாயிகள் தூர்வாரும் பணிக்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் கூறி மனு அளிக்கக் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த திமுகவினர், விவசாயிகளிடம் தகராறில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றதா? எப்படி மனு கொடுக்க வரலாம் என்று கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து, காவல் துறையினர் திமுகவினரை சமாதானப்படுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பொதுவெளியில் அமைச்சரிடம் மனு கொடுக்கக் கூட விவசாயிகளை அனுமதிக்காமல் திமுகவினர் வாக்குவாதம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ’தமிழ்நாடு முதலமைச்சர், டிஜிபிக்கு நன்றி’ - ரவீந்தர் சந்திரசேகர்