ETV Bharat / state

விவசாயிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகை: பூம்புகார் அருகே கதவணை கட்ட பூமி பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன் விவசாயிகளின் தலைமுறை தலைமுறையான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக அமைச்சர் பேச்சு

author img

By

Published : Jul 23, 2020, 4:13 PM IST

நாகை மாவட்டம் பூம்புகார் அருகே தருமகுளம் காவிரி ஆற்றின் கடைமடை பகுதியில் கடல்நீர் உட்புகாமலும், காவிரி நீர் கடலில் கலக்காமலும் தடுக்க ரூ. 786.57 லட்சம் மதிப்பில் கதவணை கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு அப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், மயிலாடுதுறை சிறப்பு அலுவலர் லலிதா ஐ.ஏ.எஸ், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், பொதுப்பணித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில், "விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கதவணை கட்ட அனுமதித்துள்ளார். விவசாயிகளின் தலைமுறை தலைமுறையான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக அமைச்சர் பேச்சு

கட்டப்படும் கதவணையால் விவசாய நிலங்களில் கடல் நீர் உட்புகாமல், நிலத்தடி நீர் அதிகரிக்கும். மயிலாடுதுறை மாவட்டம் எல்லை பிரிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெறும். அதில் எந்தெந்த பகுதிகளை இணைப்பது, புதிய தாலுகா பிரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு விரைவில் முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அதிமுகவின் நலத்திட்டங்களை மக்கள் மறக்கவில்லை'- அமைச்சர் காமராஜ் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.