விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசு அறிவித்துள்ள கடன் உதவி திட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் இருப்பதை, ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இடும்பையன் தலைமை வகித்தார்.
இதையும் படிங்க: உங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள்... நன்றி பாலுமகேந்திரா சார்