கரோனா அச்சம் உலக மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரவுவதைத் தடுப்பதற்காக பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பரவாமல் தடுப்பதற்கு மக்கள் அதிகம் கூட தடை விதித்தும் விடுமுறைகள் அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உள்ள பிரசித்திப் பெற்ற நாகூர் தர்காவிற்கு நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகை புரிகின்றனர்.
இதன் காரணமாக, நோய் பரவலை தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை தர்காவிற்குச் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, தினமும் காலை 4 மணி முதல் 5 வரையும், மாலை 6 மணி முதல் 7 வரை ஒருமணி நேரம், திறக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி நடைபெறும் நிகழ்வுகள் மட்டும் நடைபெறும் என தர்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா பீதி : வெறிச்சோடி கிடக்கும் சுற்றுலாத் தளங்கள்!