ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த ரவீந்திரன் மகன் நந்தகுமார். இவர் தனியார் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையில் மூன்றாமாண்டு பயின்று வந்தார். மண்டபத்திலிருந்து தனது காரில் இராமநாதபுரம் நோக்கிச் சென்றபோது, உச்சிப்புளி அருகே சாலை வலசை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் பக்கவாட்டில் இருந்த பனை மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில், காரை ஓட்டி வந்த நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உச்சப்புளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பெண்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் செய்துவரும் அதிமுக' - முதலமைச்சர் பெருமிதம்