மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஊதியமின்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், இதர பணியாளர்கள் ஆகியோருக்கு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது.
நிவாரணம் வழங்கல்
இந்நிகழ்ச்சியில் கரோனா கால நிவாரண உதவித்தொகையான ரூ.4000, 15 வகையான மளிகைப்பொருட்கள் ஆகியவற்றை பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்.
தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், "மயிலாடுதுறை மாவட்டத்தில் 168 கோயில்களை சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் என 170 பயனாளிகளுக்கு தலா ரூ.4000 வீதம் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் நிதியுதவியும்,மேலும் 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப்பொருள்கள் அடங்கிய மளிகைப்பொருள்கள் தொகுப்பும் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ். வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: முன்விரோதத்தில் சிறுவனை கழுத்தை நெரித்தவருக்கு சிறை