தமிழ்நாட்டில் கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் கடந்த சில வாரங்களில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், சுமார் 25 பேர் வரை இந்தக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், அதைத் தடுக்கும் வகையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் மனித உரிமைகள் கழகம் சார்பில், டெங்கு காய்ச்சலைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் பொது மக்கள் தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும்; சாக்கடை, டயர், பிளாஸ்டிக் கழிவுகள், காலி குடங்கள், டப்பாக்கள், பேரல்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்காதவாறு, சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஏடிஸ் கொசுக்களால் உண்டாகும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பரப்புரை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: டெங்கு நோய்த்தடுப்பு பணியில் நூறுநாள் திட்ட பணியாளர்கள் - மாவட்ட ஆட்சியர்