மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மூவலூர் பகுதியைச்சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்மணி, தனது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் தந்தை நடராஜனுடன், தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசுப்பேருந்து முந்திச்செல்ல முயன்றதில், இருசக்கர வாகனத்தின் மீது உரசியது. இதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் புவனேஸ்வரியின் எட்டு மாத பெண் குழந்தை பேருந்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இருசக்கர வாகனத்தை ஓட்டிய நடராஜன், புவனேஸ்வரி இருவருக்கும் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குத்தாலம் போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்தை காவல் நிலையத்துக்கு எடுத்துச்சென்று, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது... ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்...