மயிலாடுதுறை ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் நாளன்று பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் மயிலாடுதுறை மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஆடிப்பெருக்கை கொண்டாடுவர்.
அதேபோல், பூம்புகாரில் காவிரி சங்கமமாகும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்தாண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் வெகு விமர்சையாக விழா கொண்டாப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆடிபெருக்கு விழா கொண்டாட்டத்திற்கு தடை
ஆனால், கரோனா தாக்கம் காரணமாக கடற்கரை, காவிரிக்கரை, கோயில்களில் பொதுமக்கள் கூடி ஆடிபெருக்கினை கொண்டாட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தடை விதித்தார்.
அதே போல் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் இன்று (ஜூலை 08) முதல் நான்கு நாள்களுக்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சேலத்தில் கோலாகலமாக நடந்த ஆடி தேங்காய் சுடும் திருவிழா!