மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ். பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் 300க்கும் மேற்பட்டவர்கள் தங்களை அஇஅதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தொடர்ந்து 300க்கும் மேற்பட்டோர் தங்களை அண்ணா திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு ஓ.எஸ். மணியன் சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான ஓ.எஸ். மணியன் நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது பேசிய அவர், “திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதியை கூறி ஆட்சியைப் பிடித்துள்ளார்கள் என்பதை பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த திமுக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. அவர்கள் நிறைவேற்றிய வாக்குறுதிகளை ஐந்து விரல்களில் எண்ணிவிடலாம் என்று பேசினார்.
மேலும், அதிமுக தொடர்பான தேர்தல் வழக்குகள் குறித்து மேடையில் பேசிய ஓஎஸ் மணியன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொண்டு வந்த கொடி யார் கையில் இருக்கிறதோ இரட்டை இலை சின்னம் தலைமை அலுவலகம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் தான் உண்மையான அதிமுக. தற்போது இவை அனைத்தும் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கையில் இருக்கிறது.
மற்றவர்கள் நீதிமன்ற படிகளில் ஏறி இறங்குவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதிமுக தொண்டர்கள் யார் பெயரை ஓங்கி ஒலிக்கிறார்களோ அவர்தான் அதிமுக பொதுச்செயலாளராக இருக்க முடியும் அவர்தான் எடப்பாடி பழனிசாமி” என்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாநாடு; அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்