நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதிக்கான திமுக கூட்டணி கட்சி செயல்வீரர்களின் கூட்டம் இன்று நாகை மாவட்டம் கீழ்வேலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.
கூட்டத்தின் மேடையில், தி.மு.க கூட்டணி கட்சியில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான, தமிமுன் அன்சாரியின் படமும் இடம்பெற்றிருந்தது.
திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தமிமுன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக கூட்டணி கட்சியின் தேர்தல் பிரச்சார பேனர்களில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.