ETV Bharat / state

கம்பர் பிறந்த நாள்: தேரழுந்தூரில் 93ஆம் ஆண்டு 'கம்பர் விழா' கொண்டாட்டம்! - 93rd yr Kambar festival celebration

கவிப்பேரரசர் (Kambar) கம்பர் பிறந்த நாளான இன்று அவர் பிறந்த தேரெழுந்தூரில் '93ஆம் ஆண்டு கம்பர் விழா' கம்பர் கழகத்தின் சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 7, 2023, 6:29 PM IST

கம்பர் பிறந்த நாள்; தேரழுந்தூரில் 93ஆம் ஆண்டு 'கம்பர் விழா' கொண்டாட்டம்

மயிலாடுதுறை: 'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங் கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை' என பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தைப் பெறுபவர் 'கம்பர்'(Kambar, Tamil Poet). 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள். இத்தகைய சிறப்புகள் பல பெற்ற கம்பர் பிறந்தது தேரழுந்தூர்.

இவரது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் விழா, 'தேரழுந்தூர் கம்பர் கழகம்' மற்றும் 'புதுக்கோட்டைக் கம்பன் கழகம்' சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் 93ஆம் ஆண்டு 'கம்பர் விழா' இன்று (ஜன.7) தொடங்கியது. தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் கம்பர் வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து கம்பர் இயற்றிய கம்பராமாயண புத்தகங்களையும், சீர் வரிசைகளையும் தமிழ் அறிஞர்கள் தங்கள் தலைகளில் சுமந்து வீதி உலாவாகக் கம்பர் கோட்டத்தை அடைந்தனர். அங்கு அமைந்துள்ள கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்குப் புகழாரம் சூட்டிப் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த தமிழறிஞர்கள் வழக்காடு மன்றம், சொற்பொழிவு, உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு கம்பரின் புகழ்பாடினர்.

இதையும் படிங்க: விபத்தை தவிர்க்கும் விஷேச ஹெல்மெட் - பள்ளி மாணவி கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.