ETV Bharat / state

வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து... 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 10:55 PM IST

house collapsed:நாகை அருகே வீடு சுத்தம் செய்யும் பொழுது சிமெண்ட் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

15-year-old-boy-died-roof-house-collapses-near-nagai
15 வயது சிறுவன் உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த புலியூர் மேலத் தெருவை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான காலனி வீட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேகரின் தம்பி மகன் அஜிஸ் மற்றும் அவரது நண்பர்கள் நரேஷ் வெற்றிவேல் லிவின் ராஜ் ஆகியோர் தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக காலனி வீட்டின் சிமெண்ட் மேற்கூரை திடீரென இடிந்து சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் நான்கு சிறுவர்களும் வீட்டின் உள்பகுதியில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்த நான்கு சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் அஜிஸ் (வயது 15) என்ற சிறுவன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் 3 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். கனமழை காரணமாக மழை நீர் ஊறி வீட்டில் சிமெண்ட் மேற்கூரை வலுவிழந்து இருந்த நிலையில் சிறுவர்கள் தூய்மை பணியின் போது இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எண்ணூர் அம்மோனியம் வாயு கசிவு: மீண்டும் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.