ETV Bharat / state

பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் செயல்படாதது ஏன்? - நீதிபதிகள்

author img

By

Published : Nov 17, 2022, 10:41 PM IST

2012-ல் அரசாணை வெளியிட்டு, இதுவரை மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன்? என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் செயல்படாதது ஏன் நீதிபதிகள் கேள்வி

மதுரை: மதுரையைச் சேர்ந்த வெர்ணிகா மேரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக போக்சோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகிறது. இதில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதனால் பள்ளிப்பயலும் பெண் குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு 2012-ம் ஆண்டு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி மாணவ, மாணவிகளுக்கு மன ரீதியான அழுத்தத்தைப் போக்க, மொபைல் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என அந்த அரசாணையில் குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் மனநலம் குறித்த ஆலோசனையை, மாணவ மாணவிகளுக்கு வழங்கும் மொபைல் ஆலோசனை மையம் இயங்குகிறதா என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, முறையாக பதில் அளிக்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி பள்ளி மாணவ, மாணவியருக்கு முறையாக மொபைல் மனநல ஆலோசனை மையம் மூலம் ஆலோசனை வழங்க வேண்டும், என பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, 2012-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மொபைல் மன ஆலோசனை மையம் அமைத்து மாணவ மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ”2012-ல் அரசாணை வெளியிட்டு இதுவரை ’மொபைல் மனநல ஆலோசனை மையம்’ முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன்?” என தமிழ்நாடு அரசிற்கு கேள்வி எழுப்பினர்.

மேலும் பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக செயல்படுத்த வேண்டும். மொபைல் மனநல ஆலோசனை மையம் மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்று. எனவே, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் அரசாணையின்படி ’மொபைல் மனநல ஆலோசனை மையம்’ அமைத்து முறையாக பள்ளி மாணவ, மாணவியருக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கினை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: மேகமலையில் இருப்பது சுற்றுலா விடுதியா?குடியிருப்பா?: ஆய்வு செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.