ETV Bharat / state

நெல்லை - திருச்செந்தூர் ரயில் பாதையில் ரயில்களை 110 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதி - திருச்செந்தூர் ரயில்கள்

மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் ரயில்களை 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே அனுமதித்துள்ளது.

திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் ரயில்களை 110 கி.மீ வேகத்தில் இயக்க அனுமதி

author img

By

Published : Dec 10, 2022, 5:22 PM IST

மதுரை: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரை இணைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து 61 கி.மீ. தூர ரயில் பாதை அமைந்துள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு ஏழு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மறு மார்க்கத்தில் திருச்செந்தூரிலிருந்து இந்த ஏழு ரயில்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றன. தற்போது இந்தப் பகுதியில் ரயில்கள் 70 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. ரயில்களின் வேகத்தை அதிகரிக்க இந்தப் பகுதியில் ரயில் பாதையினை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ரயில் வேக சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதையடுத்து திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்வே பிரிவில் ரயில்களை 110 கி.மீ வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்தப் பகுதியில் ரயில்கள் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.

மேலும் செங்கோட்டை - கொல்லம், திண்டுக்கல் - பழனி - பொள்ளாச்சி, மதுரை - விருதுநகர் ஆகிய ரயில் பிரிவுகளில் ரயில் நிலையங்களில் ரயில்கள் நேரடி ரயில் பாதையில் (Main line) இருந்து அருகில் உள்ள ரயில் பாதையில் (Loop line) பயணிக்கும்போது இதுவரை 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. இதுவும் தற்போது இந்தப் பகுதிகளில் 30 கி.மீ. வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்களை வேகமாக இயக்குவதால் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் பாஜக வெற்றி பெறும் - செல்லூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.