மதுரை மத்திய சிறையில் இன்று மதுரை சிறைத்துறை சரக டிஐஜி பழனி ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து மத்திய சிறை வளாகத்தில் நடைபெற்ற சிறை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் சிறப்பாக பணியாற்றிய 12 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறை நல் பணி பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.
அருப்புக்கோட்டை கிளைச் சிறையில் முதல்நிலைக் காவலராக பணியாற்றும் வில்லியம் செல்லப்பா, திண்டுக்கல் மாவட்ட சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றும் ரவிச்சந்திரன், மதுரை மத்திய சிறையின் முதல்நிலைக் காவலர்கள் நாகராஜன், செங்குட்டுவன், வேல்முருகன் சுந்தரபாண்டியன் தங்கமாயன், செந்தில்குமார், எஸ். குமாரசாமி, திருமங்கலம் கிளைச் சிறையில் முதல் நிலை காவலர் முத்துக்குமார், சிவகங்கை கிளை சிறை முதன்மை காவலர் ராஜேஷ் கண்ணா, விருதுநகர் மாவட்ட சிறை முதல் நிலை காவலர் ராஜேஷ்வரன் ஆகியோருக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய இரண்டாம் நிலை காவலர் தி. பார்த்தசாரதி (24), கடந்த 21ஆம் தேதி அவரது சொந்த ஊரான தேவசேரி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கும் பொருட்டு சிறைக்காவலர்கள் சார்பில் திரட்டப்பட்ட 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை இறந்த காவலரின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இதையும் படிங்க :பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு!