மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது, தொட்டப்பநாயக்கனூர். இப்பகுதி கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானதால், கட்டுப்பாட்டுப்பகுதியாக அறிவிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இங்குள்ள பெரும்பான்மையானோர் பால் உற்பத்தியாளர்கள் என்பதால், பசுக்களுக்குத் தீவனம் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், தொட்டப்பநாயக்கனூர் பகுதியில் வாழும் கால்நடை விவசாயிகளுக்கு இரண்டு ஆயிரத்து 870 கிலோ வைக்கோல் தீவனம் வழங்க மதுரை ஆட்சியர் டி.ஜி. வினய் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு கால்நடைத் துறை சார்பில் தொட்டப்ப நாயக்கனுர் பகுதியிலுள்ள 82 பயனாளிகளுக்கு தலா 35 கிலோ வைக்கோல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்