மதுரை திருப்பரங்குன்றம் புதிய மலை பாதையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள புற்களில் நேற்று மாலை திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. தீ மளமளவென மலைகளில் பரவத்தொடங்கியது. மேலும், அங்குள்ள வயல்வெளிகளிலும் தீ பரவியது.
இதனைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கும், வனத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் மதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதையும் படிங்க: மகா தீப மலையில் தீ வைப்பு: போராடி அனைத்த தீயணைப்பு துறை!