ETV Bharat / state

தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை! - உதவி தொகை

மதுரை: தபால் தலை சேகரிப்பாளர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் எனவும், வரும் 26ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் எனவும் மதுரை கோட்ட மூத்த கண்காணிப்பாளர் ஸ்ரீ ஹர்ஷா கூறியுள்ளார்.

தபால் தலையில் மாணவர்களுக்கு உதவித்தொகை!
author img

By

Published : Jul 22, 2019, 4:00 PM IST

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை 60 சதவீத தேர்ச்சியுடைய மாணவர்கள், தங்கள் பள்ளியில் தபால்தலை சேகரிப்பாளர் சங்க உறுப்பினராகவோ, தபால்தலை வைப்புக் கணக்கு உடையவராகவோ இருந்தால் அவர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு மாதம் ரூ. 500 வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் 0452-234 5300 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம். மேலும். விண்ணப்பங்களை www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் தபால் உறையின்மீது "தீனதயாள் ஸ்பர்ஷ் யோஜனா" என எழுதி அனுப்பவேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி, தபால் துறை தலைவர், தென் மண்டலம், மதுரை-625
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் ஜூலை 26 ஆகும்.

புதிதாக சங்க உறுப்பினராகவும், வைப்புக் கணக்கு தொடங்கவும் தொடர்புகொள்ள, முதுநிலை தபால் அதிகாரி, சேதுபதி பள்ளி அருகில், மதுரை-625 001 என்ற முகவரியில் நேரில் வந்து தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஸ்ரீ ஹர்ஷா கூறினார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.