மதுரை: பயணிகளின் வசதிக்காக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரயில் இயக்கவும் மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை இரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி காரணத்தால் தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: பிப்ரவரி 7 முதல் மார்ச் 7 வரை பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731), பிப்ரவரி 6 முதல் மார்ச் 6 வரை திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732), மதுரை - ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில்கள் (06651/06652, 06653/06654, 06655/06656), திண்டுக்கல் - மதுரை - திண்டுக்கல் சிறப்பு ரயில்கள் (06609/06610), பிப்ரவரி 15 முதல் மார்ச் 7 வரை தேனி மதுரை சிறப்பு ரயில் (06702).
பிப்ரவரி 16 முதல் மார்ச் 7 வரை மதுரை - தேனி சிறப்பு ரயில் (06701), பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை செங்கோட்டை - மதுரை சிறப்பு ரயில் (06664), செங்கோட்டை - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06648), திருநெல்வேலி - செங்கோட்டை சிறப்பு ரயில் (06687), பிப்ரவரி 17 முதல் மார்ச் 7 வரை மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் (06663).
பிப்ரவரி 16, 17, 19, 23, 24, 26 மார்க் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) மற்றும் பிப்ரவரி 17, 18, 20, 24, 25, 27 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருப்பதி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (16779), பிப்ரவரி 18, 25 மார்ச் 1, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் (22621) பிப்ரவரி 16, 23 மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (22622).
பிப்ரவரி 16, 17, 20, 21, 23, 24, 27, 28 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605), பிப்ரவரி 17, 18, 21, 22, 24, 25, 28 மார்ச் 1, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய காரைக்குடி - சென்னை பல்லவன் விரைவு ரயில் (12606), பிப்ரவரி 16, 18, 23, 25 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - சென்னை மஹால் விரைவு ரயில் (22624), பிப்ரவரி 17, 19, 24, 26 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - மதுரை மஹால் விரைவு ரயில் (22623).
பிப்ரவரி 22, 24, 27 மற்றும் மார்ச் 1, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மதுரை விரைவு ரயில் (20601), பிப்ரவரி 23, 26, 28 மற்றும் மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (20602), பிப்ரவரி 26-ல் புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (16861), பிப்ரவரி 27-ல் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் (16862).
பிப்ரவரி 27, மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் ரயில் (22657), பிப்ரவரி 28 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில் (22658), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கோயம்புத்தூர் விரைவு ரயில் (22667), பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் - நாகர்கோவில் விரைவு ரயில் (22628).
மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் (22627/22628), மார்ச் 1, 2 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயில் (17235), மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் (17236), மார்ச் 2 அன்று புறப்பட வேண்டிய சென்னை - நாகர்கோவில் விரைவு ரயில் (12667), மார்ச் 3 அன்று புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை விரைவு ரயில் (12668).
மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில்கள் (06405/06409), மார்ச் 5 அன்று புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் - மதுரை விரைவு ரயில் (16721), மார்ச் 6 அன்று புறப்பட வேண்டிய மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயில் (16722), மார்ச் 5 அன்று புறப்பட வேண்டிய விழுப்புரம் - மதுரை விரைவு ரயில் (16867), மார்ச் 6 அன்று புறப்பட வேண்டிய மதுரை - விழுப்புரம் ரயில் (16868), மார்ச் 1, 2, 3, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஈரோடு - திருநெல்வேலி விரைவு ரயில் (16845), மார்ச் 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஈரோடு விரைவு ரயில் (16846) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
இதையும் படிங்க: Vani Jayaram: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!