ETV Bharat / state

சூரசம்ஹார வழக்கு முடித்துவைப்பு

author img

By

Published : Nov 19, 2020, 4:20 PM IST

மதுரை: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார நிகழ்வானது கடற்கரையில் நடைபெறும் என அரசுத் தரப்பில் தெரிவித்ததால் வழக்கை முடித்துவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai
madurai

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 21ஆம் தேதி வரை 12 நாள்கள் இவ்விழாவானது நடைபெற உள்ளது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறுவது வழக்கம், அதேபோல் திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம், இந்த விழாவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

ஆனால் இந்த வருடம் கரோனா நோய்த்தொற்று காரணமாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வானது கோயிலின் உள்ளே உள்ள மண்டபத்தில் நடைபெறும் எனக் கோயில் நிர்வாகம், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டது. இது ஏற்கத்தக்கது அல்ல.

திருவிழாவானது பாரம்பரிய முறைப்படி நடைபெற வேண்டும். சூரசம்ஹாரம் நிகழ்வானது கடற்கரையிலும் கல்யாணம் ஆனது திருக்கல்யாண மண்டபத்திலும் பொதுமக்கள் இல்லாமல் பாரம்பரிய முறைப்படி நடைபெறுவதற்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரி்யிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சூரசம்ஹார நிகழ்வானது கடற்கரைப் பகுதியில் நடைபெற உள்ளதாகவும் கல்யாண நிகழ்வானது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ளே உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.