மதுரை மாநகராட்சி அலுவலர்களுடன் கூட்டுறவுத்துத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "கரோனா தடுப்பில் மதுரை மாநகராட்சி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. காய்கறி மார்க்கெட் 35 இடங்களில் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இல்லங்களை தேடிச் சென்று காய்கறி விற்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கும் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் செல்கின்றன. கரோனாவை முழுமையாக மதுரையில் கட்டுப்படுத்தி உள்ளோம்.
என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சாக்கடை அடைப்புகளை சரி செய்யும் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.36 லட்சமும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ரூ.14 லட்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை கூறுவதை தவிர்த்துவிட்டு விமர்சனம் செய்து வருகிறார். பல கோடி சொத்துக்கள் உள்ள திமுகவினர் ஒரு கோடியே கொடுத்துள்ளனர். கூட்டுறவுத்துறை குறைந்தபட்ச நிதியிலேயே இயங்கிவருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் கொடுக்கக் கூடிய உணவுகளுக்கான முழு விலையை இன்று முதல் மதுரை மாநகர அதிமுக ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.