ETV Bharat / state

சாத்தான்குளம் வழக்கு: காவலர் முருகனின் ஜாமீன் மனு 3ஆவது முறையாக ஒத்திவைப்பு! - காவலர் முருகனின் ஜாமீன் மனு 3ஆவது முறையாக ஒத்திவைப்பு!

மதுரை: சாத்தன்குளம் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலுள்ள காவலர் முருகனின் ஜாமீன் மனு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

mdu
mdu
author img

By

Published : Aug 18, 2020, 10:52 PM IST

சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை- மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கரோனாவால் உயிரிழந்தார். இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள காவலர் முருகன் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக கடந்த 6ஆம் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், மனு மீதான விசாரணை 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர், 12ஆம் தேதி மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றைய தேதிக்கு (ஆக.18) ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று, மனு மீதான விசாரணை நீதிபதி நசீமா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவலர் முருகன் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிஐ தரப்பில் வழக்கறிஞர்கள் காணொலிக் காட்சி வாயிலாக வாதம் நடத்தினர்.

இதையடுத்து, முருகன் ஜாமீன் மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரவுள்ள நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார்.

மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முருகனின் ஜாமீன் மனு இதுவரை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.