ETV Bharat / state

Union budget 2023: சில்லறை வியாபாரிகளின் எதிர்பார்ப்பு என்ன?

ஆண்டு விற்பனைத்தொகை ரூ.3 கோடி வரை உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சில்லறை வியாபாரிகளுக்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை

author img

By

Published : Jan 26, 2023, 7:00 AM IST

மதுரை: மத்திய அரசின் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "சில்லறை வியாபார நிறுவனங்கள் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகும். ஏறக்குறைய 120 லட்சம் சில்லறை பலசரக்கு வியாபார நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 60 சதவிகிதத்திற்கும் மேல் அரசிடம் எந்த உதவியும் பெறாத நிறுவனங்கள். கரோனா தொற்றுக்குப் பிறகு தற்பொழுது மாதம் ரூ.1.5 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வருவாய் கிடைப்பதாலும், நேரடி வரி வருவாய் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டதை விடக் கூடுதலாக வசூலாகும் என்பதாலும் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டு விட்டதாக முடிவுக்கு வரக்கூடாது.

பெரிய நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியடைந்து வருகின்றன. ஆனால் சிறிய சில்லறை வியாபார நிறுவனங்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் மூடப்பட்டு வருகின்றன. அவற்றின் வரி வருவாய் பங்களிப்பை ஆய்வு செய்ய வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பிற்காக இயற்றப்பட்ட சட்டம் போன்று சில்லறை வியாபாரிகளுக்கென எந்தப் பாதுகாப்புச் சட்டமும் இயற்றப்படவில்லை.

சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு பிறருக்கும் அதிக அளவில் வேலை கொடுக்கும் சிறிய சில்லறை வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டால் வேலையில்லாத் திண்டாட்டம் நம் நாட்டில் அதிகரிக்கும். பெரும் தொகையைத் தொழில்களில் முதலீடு செய்து வேலை வாய்ப்பை உருவாக்குகிறோம். புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு தங்கள் வணிகத்தை வளர்த்துக் கொள்ளச் சிறிய சில்லறை வியாபாரிகளின் கையில் தேவையான பணம் இருக்கச் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.

அப்படிச் செய்தால் தான் அந்த நிறுவனங்கள் மூடப்படுவதைத் தடுக்க முடியும், வேலை வாய்ப்புகளும் தொடரும். எனவே ஆண்டு விற்பனைத்தொகை ரூபாய் மூன்று கோடி வரை உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு, வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். மேலும் அவர்களின் பாதுகாப்புக்கென தனிச் சட்டமும் இயற்றப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'பாஜகவின் பொய்யான வாக்குறுதிகள்; 6 லட்சம் கிராமங்களில் காங்கிரஸ் மக்களிடம் கொண்டுசேர்க்கிறது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.