ETV Bharat / state

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள்: சட்ட உதவிகள் செய்ய தயார் என மத்திய அரசு விளக்கம்! - fisherman news

மீனவர்களை மீட்கவும், கச்சத்தீவு உடன்படிக்கையை ரத்து செய்யவும் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இந்திய மீனவர்களுக்கு தேவையான சட்ட ரீதியான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்திய மீனவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகள் செய்ய தயார் - மத்திய அரசு

author img

By

Published : Jun 23, 2023, 8:31 PM IST

மதுரை: 1974 மற்றும் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, மீனவர்களைக் கைது செய்து படகுகளைப் பறிமுதல் செய்வது ஆகிய செயல்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஜுன் 21 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை மீட்கவும், 1974 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை இடையே ஆன உடன்படிக்கைகளை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டெடுக்க கோரி சென்னை மீனவர்கள் நலன் சங்கத்தைச் சேர்ந்த பீட்டர் ராயன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. 1974ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின் படி பாரம்பரியமாக மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எந்த இடையூறும் செய்ய கூடாது” என உள்ளது.

1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர் என RTI தகவல் உள்ளது. இதுவரை தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளனர். அதன் பின்பு 2013 ஆம் ஆண்டு 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 19.06.2023ல் 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டனர். தற்போது 21.06.2023 ஆம் தேதி 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர்.

1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையை இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர். எனவே, இடைக்கால உத்தரவாக 22 மீனவர்களை இந்தியா கொண்டுவர உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், மேலும், 1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை என இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாகி நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் மத்திய அரசு தரப்பில், இந்திய மீனவர்கள் ஜூலை 5ஆம் தேதி வரை இலங்கையிலுள்ள நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறினர்.

இந்திய மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு தேவையான சட்ட ரீதியான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும். தொடர்ந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், 1974ல் இந்தியா - இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: விரைவில் மாமன்னன் ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் - அமைச்சர் சாமிநாதன் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.