ETV Bharat / state

'இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்குப் பாடுபடுவேன்' - ரவிச்சந்திரன் - ரவிச்சந்திரன்

இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்குத் தொடர்ந்து பாடுபடுவேன் என ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்குப் பாடுபடுவேன்

author img

By

Published : Nov 13, 2022, 8:08 AM IST

Updated : Nov 13, 2022, 10:59 AM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த ரவிச்சந்திரன் பரோல் விடுப்பிலிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் (நவ.11) ஆறுபேரையும் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சூரப்ப நாயக்கன்பட்டியிலிருந்து இன்று மாலை மதுரை மத்திய சிறைக்கு ரவிச்சந்திரன் வந்து, சிறை நிர்வாக நடைமுறைகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

சிறை வாசலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், என்னுடைய விடுதலைக்குத் துணை நின்ற அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து எனது நன்றியைத் தெரிவிப்பேன். எங்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அமைப்புகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வழக்கில் என்னுடன் சேர்த்து ஆறு பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சி என்றாலும், இதனை ஆறுதலாகவே நான் பார்க்கிறேன். ஏனென்றால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதில் வெற்றி என்பதற்கு ஏதுமில்லை. ஆனால், இவையனைத்தும் எனது விடுதலைக்காக உழைத்த சக தோழர்களின் வெற்றியாகும். உலகத் தமிழினத்தின் மகிழ்ச்சி. இது தாமதமான நீதி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இத்தனை ஆண்டுகளாக எனக்குப் பாதுகாப்பு அளித்தது என்னுடைய குடும்பம்தான். ஆகையால் அவர்களுக்காகத்தான் என்னுடைய காலங்கள் இனி அமையும். அதற்காக எனது விடுதலைக்குப் போராடிய தோழர்களின் கருத்துக்கள் ஆலோசனைகளையும் கேட்ட பிறகு எனது அடுத்தகட்ட முடிவுகளை நான் மேற்கொள்வேன். எதுவாக இருந்தாலும் இந்த மக்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யக் காத்திருக்கும் அதே நேரம், தொடர்ந்து எனது 'டாப் சீக்ரெட்' நூலைப் போன்று மேலும் பல நூல்களை நான் எழுதுவேன். எனக்கும் என்னைச் சார்ந்தோருக்கும் கிடைத்த ஆறுதலாக மட்டுமே நான் இந்த விடுதலையைப் பார்க்கிறேன். அது என்னுடைய அம்மாவுக்கும் பொருந்தும்.

நான்கு சுவர் உள்ள சிறைக்குள் நாங்கள் அனுபவித்த துயரத்தைக் காட்டிலும், என்னைப் பிரிந்து என் அம்மா அடைந்த துயர் அதிகம். அதனை எவ்வாறு ஈடு செய்ய முடியும் என்பது தெரியவில்லை. இயன்றவரை என் அம்மாவுக்கும் எனது சகோதரர் குடும்பத்திற்கும் உதவியாக இருப்பேன். எனது திருமணத்தைக் குறித்து நான் எதுவும் முடிவெடுக்கவில்லை.

எங்களுடைய விடுதலைக்கான முதல் பயணம் மதுரையிலிருந்துதான் தொடங்கியது. அதேபோன்று மதுரையிலுள்ள எனது நண்பர்களின் தொடர்ந்த போராட்டமும், ஆதரவும்தான் இந்த விடுதலையை சாத்தியமாக்கியுள்ளது. தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் உரைகல்லாக எவ்வாறு மதுரை உள்ளதோ, அதேபோன்று எங்களது விடுதலைக்கான துவக்கப்புள்ளியும் மதுரைதான்.

என்னுடன் சேர்ந்து விடுதலையாகியுள்ள தோழர்கள் சிலர் வெளியே வந்தாலும், சிறப்பு முகாம் என்னும் சிறையில்தான் அடைக்கப்படுவார்கள். அதனை வீட்டுச் சிறை என்று சொல்லலாம். மத்திய அரசு எங்களது விடுதலையை எதிர்த்து சட்டத்திற்கு அப்பாற்பட்டு சில உத்திகளைக் கையாண்டு தடுத்தது. மாநில அரசின் உறுதியான சட்ட நடவடிக்கை மற்றும் அனுசரணை, தமிழ்நாட்டிலுள்ள கட்சிகளின் தலைவர்களின் ஆதரவும்தான் விடுதலைக்குக் காரணம்.

எங்களுடைய விடுதலையை மத்திய அரசு 13 ஆண்டுகள் தாமதப்படுத்தியுள்ளது. என்னுடன் நளினி, ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நால்வரின் விடுதலையும் கடந்த 2004-ஆம் ஆண்டே சாத்தியப்படவேண்டியது. அந்த அடிப்படையில் மத்திய அரசிடமிருந்து எந்தவித கருணையையும் நாம் எதிர்பார்ப்பதற்கில்லை.

தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது. சட்டரீதியான போராட்டத்தின் வாயிலாகத்தான் தங்கள் நாடுகளுக்குச் செல்ல அவர்களால் முடியும். தாமதமானாலும் விரைவில் அதுவும் நடக்கும் என நம்புகிறேன். அவர்களும் அவர்தம் குடும்பத்துடன் இணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

கடந்த 30 ஆண்டு சிறை வாழ்க்கையில் எஞ்சியது தற்போது என்னோடு இருக்கின்ற இந்த உறவுகள் மட்டும்தான். எங்கள் இழப்புகளைக் கணக்கெடுக்க முடியாது. அத்தனை இழந்துள்ளோம். இயன்றவரை எனது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயன்று வருகிறேன். ஆனாலும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக நெஞ்சுவலியால் அவ்வப்போது பாதிப்படைந்துள்ளேன். கடந்த ஓராண்டாக அம்மாவின் உணவு, பரிவு, அன்பு காரணமாக நன்றாக உள்ளேன்.

என்னுடைய கிராமத்தில் எனது முன்னோர்களின் விவசாய நிலங்கள் உள்ளன. அங்கு சென்று விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். அத்தோடு எழுத்துப்பணிக்கும் நேரம் ஒதுக்குவேன். தண்டனைக்குப் பிறகான விடுதலை என்ற சட்டம் இந்தியாவில் இல்லை. அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற முன்னேறிய நாடுகளில் அச்சட்டம் நடைமுறையில் உள்ளது.

அப்பாவிகள் தண்டிக்கப்பட்டு இறந்துவிட்டால், அவர்களது பழியைத் துடைப்பதற்கான சட்ட நடைமுறைகள் இங்கு இல்லை. ஆனால், அதற்கான வழியை உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் குறிப்பிட்டுள்ளது. இதனைச் சட்ட ஆணையம் மற்றும் அரசு நிர்வாகத்தின் மூலமாகக் கொண்டு வர பாடுபடுவேன். காரணம் இதனால் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இதுவொரு அரசியல் வழக்கு. இதன் தன்மை குறித்து எல்லோருக்கும் தெரியும். இன்னும்கூட இந்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக இந்த வழக்கைக் கலைத்துவிட்டு மீண்டும் சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளார்கள். அதன் மூலம் ஒன்றும் ஆகப்போவதில்லை.

இந்த வழக்கைப் பொறுத்தவரை பல வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளின் கை உள்ளது. ஆகையால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதால்தான் எங்களைக் குறி வைத்தனர். இந்த வழக்கில் 26 பேருக்கு தூக்கு என்பதையெல்லாம் கடந்து 26 பேரும் விடுதலை என்ற நிலையை எட்டியிருக்கிறோம். இதற்குக் காரணம் நமது தமிழர் அறம்தான்.

இந்த வழக்கு காலம் முழுவதும் பேசப்படும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. இதற்கான திறவுகோலை டில்லியில் உள்ள சட்ட ஆணையத்தின் மூலமாக நாங்கள் திறக்க முயற்சிப்போம். இதனை விவாதப்பொருளாக மாற்றுவோம். ஆயுள் தண்டனைக் கைதிகள் தொடர்பான சில சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. எங்களைப் போன்று பாதிக்கப்பட்ட நிறைய கைதிகள் விடுதலையாகாமல் உள்ளனர்.

தமிழ்நாட்டில் சிறைவாசிகள் விடுதலைக்கான சட்டம் கிடையாது. விதிகள் தான் உண்டு. இதனை ஆளுநர் எப்படி வேண்டுமானாலும் புறக்கணிக்கலாம். அதனைச் சட்டமாக இயற்றுவதற்கு முயற்சி மேற்கொள்வோம். இதன் தொடர்ச்சியாக அரசியல் சிறைவாசிகள் மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகள் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் விடுதலைக்காகவும் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைப்போம். தமிழ்நாடு முதலமைச்சர் கண்டிப்பாக இதனை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்' என்றார். இந்த பேட்டியின்போது தனது விடுதலைக்காக பணியாற்றிய வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், கட்சித்தலைவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்குப் பாடுபடுவேன்

இதையும் படிங்க: ராஜீவ் காந்தி வழக்கில் 6 பேரும் விடுதலை.. மதுரை சிறையிலிருந்து விடுதலையானார் ரவிச்சந்திரன்

Last Updated : Nov 13, 2022, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.