மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் ரவிச்சந்திரன் உள்பட் ஏழு பேர் சிறையில் தண்டனை அனுபவித்துவருகின்றனர். இந்த நிலையில் மதுரை மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரன் இன்று பரோலில் வெளிவருவதாக இருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை வெளிவருவார் எனச் சிறைத் துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரவிச்சந்திரனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசின் உள் துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். ரவிச்சந்திரனின் தாயார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில் இந்த பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை அல்லது மாலையில் ரவிச்சந்திரன் வெளியே வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பை நேரில் பார்வையிட முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையிலிருந்து தரை வழிப் பயணமாக கன்னியாகுமரி செல்லவுள்ளார்.
இதன் காரணமாகவும் பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டும் நாளை ரவிச்சந்திரன் பரோலில் விடுவிக்கப்படுவார் எனச் சிறைத் துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஷேர் ஆட்டோ மீது மோதிய இருசக்கர வாகனம்: இருவர் காயம்