தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், கடலூர் என்எல்சி சார்பாக தூத்துக்குடி மாவட்டம் மேலபாண்டியாபுரம் பாறைகுட்டம், முறம்பன் ஆகிய பகுதிகளில் அனல் மின் நிலையத்தில் இருந்து வரும் சாம்பல்களை சுத்திகரித்து அனுப்புவதற்காக , சுற்று சூழல் பாதுகாப்பிற்காக இடம் கையகப்படுத்தப்பட்டது . இதற்கு உரிய நிவாரணமும் வழங்கப்பட்டது .
இந்த நிலையில் , இந்த என்எல்சி-க்கு சொந்தமான இடத்தில் விவிட் என்ற தனியார் சூரிய மின்சக்தி திட்டத்திற்காக அதிக சக்தி வாய்ந்த மின் கம்பிகளை கொண்டு செல்லும் மின் கோபுரங்களை அமைக்கின்றனர் .
கிராம மக்களின் நிலங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பெறப்பட்டது. ஆனால் இதில் பிற தனியார் நிறுவனத்தின் சூரிய சக்தி மின் திட்டத்திற்காக உயர் அழுத்த மின்கம்பி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இது சட்டவிரோத செயல். இதை தடை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார் .
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோரி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர், பதில் அளிக்க கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.