ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை ரத்து செய்து இந்திய ஒருமைப்பாட்டை காக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
முன்னதாக பட்டாசு, இனிப்பு வழங்குவதற்கு அனுமதி பெறாததால், காவல் துறையினர் தடுத்துநிறுத்தியதால் காவல் துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் ஜெயசிங் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்க்கும் சமூகவிரோத சக்திகளுக்கு ஆதரவாக காவல் துறையினர் செயல்படுவதாகவும், இனிப்புகள் வழங்குவதை தடுக்க முயன்ற காவல்துறை ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.