ETV Bharat / state

உசிலம்பட்டி 58 கிராமக்கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடக்கோரி ஆட்சியரிடம் மனு - usilampatti

மதுரை மாவட்டம், வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடக்கோரி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கதிரவன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடக்கோரி ஆட்சியரிடம் மனு

author img

By

Published : May 25, 2021, 6:39 PM IST

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த கதிரவன், 'உசிலம்பட்டி பகுதிக்கு நீர் ஆதாரமாக இருந்து வரும் 58 கிராமக் கால்வாய், வைகை அணையிலிருந்து நேரடி பாசனம் பெறும் பகுதியாகும்.

முல்லைப் பெரியாறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், தற்பொழுது அந்த அணையின் நீர் மட்டம் 130 அடிக்கு மேல் உயர்ந்து வருகிறது. அதனால், வைகை அணையில் நீர்மட்டம் 67 அடிக்கும் மேல் நிரம்பி வருகிறது.

இந்நிலையில், உசிலம்பட்டி பகுதியிலும் கோடைமழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் 58 கிராமக் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விட்டால் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செய்வதற்கு பேருதவியாக இருக்கும்' என்று அந்த மனுவில் கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.

58 கிராமக் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடக்கோரி ஆட்சியரிடம் மனு
மேலும் இதனைக்கருதி, மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக வைகை அணையிலிருந்து 58 கிராமக் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பாதுகாக்க உதவி எண் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.