ETV Bharat / state

வேளாண் பட்ஜெட்: பனையிலிருந்து மது தயாரிக்க அனுமதிக்க வேண்டும் - வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கம்

author img

By

Published : Mar 5, 2022, 4:53 PM IST

பனை மரத்தில் உற்பத்தியாகும் பனைத்தேனிலிருந்து ஏற்றுமதி தரம் வாய்ந்த ஒயின் உள்ளிட்ட விலை உயர்ந்த மதுபானங்கள் தயாரிக்க வேளாண் பட்ஜெட்டில் அனுமதிக்க வேண்டும் என வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரத்தினவேல் பேட்டி
ரத்தினவேல் பேட்டி

மதுரை: தமிழ்நாடு அரசு 2ஆவது ஆண்டாக கொண்டு வரவுள்ள வேளாண் பட்ஜெட்டில், மேலும் பல்வேறு சிறப்பு அனுமதிகளைத் தரக் கோரி, வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவருமான ரத்தினவேல் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.

மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்

அப்போது பேசிய அவர், "நமது மாநில மரமான பனையின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 7 கோடியாக இருந்தது. தற்போது வெறும் 2.5 கோடி மரங்களே பலன் தரக்கூடியனவாக உள்ளன. இந்நிலையில் பனை மரத்தை அரசின் அனுமதியின்றி வெட்டக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோன்று பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு ஆகியவற்றின் வரிசையில் பனைத்தேனிலிருந்து பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை நாம் தயாரிக்க முடியும். அதுகுறித்த ஆய்வுகளை பனை வாரியம் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

ரத்தினவேல் பேட்டி

பதநீர் இறக்கும் தொழில்நுட்பம்

பனைமரத்திலிருந்து பதநீர் எடுக்கும் பண்டைய முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதனைத் தவிர்க்கும் வண்ணம் வெப்பநிலைக் கட்டுப்பாடு உடைய காற்றில்லாப் பைகளில் சுகாதாரமான முறையில் பதநீர் இறக்கும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க வேண்டும். பனை மரத்தில் உற்பத்தியாகும் பனைத்தேனிலிருந்து விலை உயர்ந்த, ஏற்றுமதி தரம் வாய்ந்த ஒயின் உள்ளிட்ட பல்வகையான விலை உயர்ந்த மதுபானங்கள் தயாரிக்க தமிழ்நாடு அரசு வெளியிட உள்ள வேளாண் பட்ஜெட்டில் அனுமதி அளிக்க வேண்டும்.

பனைமரம் தோட்டக் கலைத்துறை அல்லது வேளாண்துறை என எதில் உள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். பனை சார்ந்த தொழிலை மீட்டெடுப்பதன் மூலம் மிகச் சிறந்த பொருளாதாரத்தை முன்னெடுக்க முடியும். கிராமங்களிலும் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

சிறுதானியங்கள் குறித்த பார்வை

வருகின்ற 2023ஆம் ஆண்டு சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகத்தின் கவனம் சிறுதானியத்தின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், நமது மாநிலத்திற்கு மிகப் பெரிய வாய்ப்பாகும். சிறுதானியங்கள் சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இயலும். தற்போது தமிழ்நாடு மக்கள் மத்தியிலும் சிறுதானியங்கள் குறித்த பார்வை ஏற்பட்டுள்ளது. அதிக மழை இல்லாத ஓரளவு வறண்ட நிலங்களிலும்கூட சிறுதானிய சாகுபடி செய்ய முடியும். ஆகையால் தென் மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சிறு தானிய உற்பத்தி அதிகம் நடைபெறுகின்ற காரணத்தால், இந்த 5 மாவட்டங்களை உள்ளடக்கி சிறுதானிய விவசாய மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் 11.75 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ளார். அதற்கு சிறுதானிய விவசாயம் அந்த இலக்கை அடைய கை கொடுக்கும்.

உணவுப் பதனீட்டு தொழில்

தென் மாவட்டங்களை உணவுப் பதனீட்டு தொழில் மையமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். மதுரை மற்றும் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகியவற்றில் உணவு தானியங்கள், பருப்பு, மாவு, உணவு எண்ணெய், அரிசி மற்றும் கோதுமைப் பொருள்கள், பால், காய்கறி, பழங்கள், சிறுதானியங்கள் போன்ற உணவு பதனீட்டுதொழில்களும், தயாரிப்பு ஆலைகளும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்கும் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆகையால் இம்மாவட்டங்களை உணவுப் பதனீட்டு தொழில் மையமாக அறிவித்து உலக அளவிலான உணவு பதனீட்டாளர்களை இம்மாவட்டங்களில் தொழில் தொடங்க செய்ய வேண்டும்.

நதிநீர் இணைப்புத் திட்டம்

ஒன்றிய அரசின் 2022-2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் இணைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணாறு, பெண்ணாறு-காவிரி என மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை இணைக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்து, மாநிலங்களின் ஒப்புதலை எதிர்நோக்கியுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சரும் வரவேற்றுள்ளார். தொடர்புடைய மாநிலங்களிடம் பேசி தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்புதல் பெற வேண்டும். அதேபோன்று மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை இணைக்கும் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பாசனப் பரப்பை 26.79 லட்சம் ஹெக்டேரிலிருந்து அதிகப்படுத்த வேண்டும்.

அதிக நிதி ஒதுக்கீடு

காவிரி-குண்டாறு, தாமிரபரணி-நம்பியாறு இணைப்புத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுற்ற 6 நதிகள் இணைப்புத் திட்டங்களையும் அங்கீகரித்து விரைந்து நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டால், 16 மாவட்டங்கள் பயன்பெறும். தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டில் நதிகள் இணைப்பிற்கு முன்னுரிமை அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: எட்டு மாவட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் நீக்கம்.... அண்ணாமலை திடீர் முடிவு...

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.